பல்லடம் அரசுக்கலை கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்றம் தொடக்கம்

போதை பொருள் பயன்பாட்டிலிருந்து மாணவர்களை பாதுகாக்கவும் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது.



திருப்பூர்: பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து மாணவர்களை பாதுகாக்கவும் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போதைப் பொருள் தடுப்பு மன்றம் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனியன், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன், பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு, சமூக ஆர்வலர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். போதைப் பொருள் தடுப்பு மன்றத்தினை காவல் ஆய்வாளர்கள் துவக்கி வைத்தனர்.



விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே காவல் ஆய்வாளர் பர்வீன் பானு பேசுகையில், அனைத்து குற்றச் சம்பங்களுக்கும் முதல் காரணமாக அமைவது போதைப் பொருட்கள் தான், வலிமையான இளைய தலைமுறையை உருவாக்க போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் தள்ளி இருக்க வேண்டும், கஞ்சா, மது போன்ற போதை பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகி விட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.



இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...