தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ - பீகார் யுடியூப்பர் கைது

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரத்தில் பீகாரைச் சேர்ந்த யுடியூப்பர் மணீஷ் காஷ்யப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள்கொல்லப்படுவது மற்றும் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டி பீகாரைச் சேர்ந்த யுடியூப்பர் மணீஷ் காஷ்யப் உள்ளிட்ட பலர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

பீகாரை சேர்ந்த பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்குதலுக்கு ஆளாவதாக போலி வீடியோக்களை தயாரித்ததாக பீகார் மற்றும் தமிழ்நாடு காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அதன்அடிப்படையில், அம்மாநில போலீசாரிடம் சரணடைந்த காஷ்யப்பை, மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவின் ஜகதீஷ்பூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இது 3வது கைதாகும்.

இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டில் பீகார் தொழிலாளர்கள் குறித்த தவறான வீடியோக்கள் எதுவும் உள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மாநிலத்தொழிலாளர் விவகாரம் தொடர்பாக போலிச் செய்தி வெளியிட்ட விவகாரத்தில் பீகார் காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் காஷ்யப், கைது செய்யப்பட்டு தனது உடைமைகளை இணைக்கும் அச்சத்தில் சனிக்கிழமை காவல்துறையில் சரணடைந்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புலம்பெயர்ந்தோர் கொல்லப்படுவது மற்றும் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்புவதில் ஈடுபட்டதுஎன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், மணீஷ் காஷ்யப் உள்ளிட்டோருக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மார்ச் 15-ம் தேதி மணீஷ் காஷ்யப் மற்றும் யுவராஜ் சிங் ராஜ்புத் ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநில காவல்துறை சிறப்புக் குழுவை உருவாக்கி, அவர்களைக் கைது செய்ய மற்ற மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது.

"பாட்னா மற்றும் சம்பாரண் காவல்துறையுடன் இணைந்து பொருளாதா குற்றப்பிரிவால் அமைக்கப்பட்ட ஆறு குழுக்கள் நேற்று முதல் அவரது இருப்பிடங்கள் மற்றும் மறைவிடங்களில் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகின்றன. கைது மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து காஷ்யப் சனிக்கிழமையன்று பெட்டியாவின் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீகார் காவல்துறையின் (தலைமையகம்) கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஜே.எஸ்.கங்வார் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் புலம்பெயர்ந்தோர் தாக்கப்பட்டு கொல்லப்படுவதுபோல்30 போலி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, தொழிலாளர்கள் மத்தியில் பீதியை பரப்பியதாக பொருளாதார குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களை தென் மாநிலத்தைவிட்டு வெளியேறவும் அந்த வீடியோவில் வற்புறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை 13 வழக்குகளை பதிவு செய்துள்ளது. முன்னதாக, தென் மாநிலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளை ஒருங்கிணைக்க பீகார் அரசு ஏற்கனவே 4 பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவை தமிழகத்துக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...