பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் போக்சோவில் கைது!

பொள்ளாச்சி அடுத்த வேடசந்தூர் அருகே 9 வயது சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரான விஜயகுமாரை, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகேயுள்ள வேடசந்தூரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் விஜயகுமார் (68). இவர் தனது வீட்டுக்கு அருகே மளிகை கடை உரிமையாளரின் 9 வயது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிறுமிகளின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...