தாராபுரம் அரசு மருத்துவமனையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு - போக்சோ வழக்கு சோதனை குறித்து விசாரணை!

தாராபுரம் அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு மற்றும் தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாபு ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர்களிடம் போக்சோ வழக்கில் சிறார்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட மகிளா நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தாராபுரம் அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு மற்றும் தாராபுரம் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் இன்று திடீரென அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.



அப்போது தலைமை மருத்துவர் சிவபாலன் மற்றும் குழுவினருடன் மருத்துவமனையில் பெண்கள் பொது வார்டு, பிரசவ வார்டு, குழந்தைகள் பிரசவ வார்டு, ஆப்ரேசன் தியேட்டர் உள்ளிட்ட பகுதி அறைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



பின்னர் நீதிபதிகள் மருத்துவர்களிடம் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு வரும் போக்சோ வழக்குகள் குறித்தும் போலீசார் குற்றவாளிகளை பரிசோதனைக்கு வரும் போது குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறார் குழந்தைகளுக்கு செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து மருத்துவர்கள் குழுவினரிடம் கேட்டறிந்தனர்.



இந்த ஆய்வின் போது, தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவபாலன், மருத்துவர்கள் சத்தியராஜ் மற்றும் பெரியசாமி, குற்றவியல் காவல் ஆய்வாளர் அன்புச் செல்வி, உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் பலரும் உடனிருந்தனர்.

அப்போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானவேல் தலைமையில் அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...