பல்லடம் இரும்பு உருக்கு ஆலை விவகாரம் - 3வது நாளாக தொடரும் போராட்டம்!

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிரான போராட்டம் 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியார் இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், முறையாக சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இந்த ஆலை இயங்கி வருவதாகவும், இந்த ஆலையில் இருந்து வெளியேறும் அதிகப்படியான புகையால் பொதுமக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இந்நிலையில் இந்த ஆலைக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட உரிமம் வழங்கக் கூடாது என கூறி ஊருக்கு நடுவே பந்தல் அமைத்து ஆலையை மூடக்கோரி மூன்று நாட்களுக்கு அப்பகுதி மக்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

மூன்றாவது நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை பாடலாக பாடி ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலைக்கான உரிமத்தை மீண்டும் வழங்கக் கூடாது எனவும், மீறி உரிமம் வழங்கினால் எங்களது போராட்டம் சாகும் வரை தொடரும் எனவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...