ஆனைக்கட்டியில் பழங்குடி மக்கள் இசைக்கு நடனமாடிய வடமாநில பழங்குடி மாணவர்கள்!

கோவை பாரதியார் பல்கலை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற பழங்குடியின இளைஞர் பரிமாற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்ட வடமாநில பழங்குடியின மாணவர்கள், அப்பகுதி மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தனர்.


கோவை: ஆனைக்கட்டி அடுத்த கொண்டனூரில் அரசாங்க பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடமாநில பழங்குடியின மாணவர்கள், அப்பகுதி மக்களுடன் இணைந்து நடனமாடினர்.

இந்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், வடமாநில பழங்குடி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர், கோவையில் நடைபெறும் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை பாரதியார் பல்கலைக்கழகம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ் நலப்பணித் திட்டம் சார்பில், ‘பழங்குடியின இளைஞர் பரிமாற்ற சிறப்பு முகாம்' நடந்தது.



இம்முகாமில் பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் 220 பேர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து ஆனைக்கட்டி கொண்டனூரில் அரசாங்க பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியிலும் அவர்கள் பங்கேற்றனர்.



அப்போது வடமாநில பழங்குடியின மாணவர்களுக்கு பேண்டு வாத்தியம் முழங்க வெகு விமரிசையாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஆனைக்கட்டி பழங்குடி மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.



பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்வியல் சூழலை பிற மாநில பழங்குடி மாணவர்களும் அறிந்துக் கொண்டனர். இதை தொடர்ந்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் பழங்குடியின மாணவர்கள் தங்கள் மாநிலத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடனமாடி அசத்தினர். இதில் பழங்குடிகள் இசை ஆரம்பித்தவுடன்,வடமாநில பழங்குடி மாணவர்கள் உற்சாகமாக நடனமாடினர்.

தமிழ் பழங்குடியின மக்கள், வடமாநில பழங்குடியின மக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து நடனமாடியது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...