தாராபுரத்தில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் - நோய் பரவும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுந்தரம் அக்ரஹாரம் தெருவில் ஹாஜியான திருமண மண்டபம் அருகில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தும், இதே நிலை தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.



திருப்பூர்: தாராபும், சுந்தரம் அக்ரஹாரம் தெருவில் ஹாஜியான திருமண்டபம் உள்ளது. இதன் அருகில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என்று தாராபுரம் நகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.



இதையும் மீறி அப்பகுதி பொதுமக்கள் அதை அலட்சியப்படுத்தும் நோக்கில் அங்கு தினசரி குப்பைகளை கொட்டி வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் பலமுறை அப்பகுதி மக்களிடம் எடுத்துக் கூறியும் அது சிலர் கண்டு கொள்ளாமல் குப்பைகளை ரோட்டிலேயே வீசி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் காய்ச்சல் நோய் தொற்றுப் போன்ற பல இன்னல்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகின்றனர்.



நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வைத்துள்ள கேமராவில் பதிவாகியுள்ள குப்பைகள் கொட்டும் நபர்கள் மீது அபராதம் விதித்து மேற்கொண்டு குப்பையில் கொட்டாமல் இருப்பதற்கு வழிவகை செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...