தமிழக பட்ஜெட் தாக்கல்: கோவையில் இனிப்புகள் வழங்கிய திமுகவினர்!

சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கோவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை வரவேற்று கோவை மாவட்ட திமுக அலுவலகம் முன்பு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



கோவை: மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட்டை வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

2023-24 பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கு உரிமைத்தொகை அறிவிப்பு, கோவையில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் சேவை, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி பூங்கா, 45 ஏக்கர் பரப்பளவில் தாவிரவியல் பூங்கா, ரூ.172 கோடி செலவில் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.



இந்நிலையில், இந்த பட்ஜெட்டை வரவேற்று, வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம் முன்பு, பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...