சாதி சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் குரும்பா சங்கத்தினர் மனு!

குரும்பா சமூக மக்கள் கல்வி, வேலைவாய்ப்பை பெற குரும்பா என்ற சாதி சான்று வழங்க வேண்டும் எனவும், ஆடு வளர்ப்பு நல வாரியம் அமைக்கவும், தங்கள் சமுதாய மக்கள் அரசியல் அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட குரும்பா சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தங்கள் சமுதாய மக்களின் வேலைவாய்ப்பு பெற, கல்வி பெற, தங்கள் சமுதாய மக்களுக்கு குருமன்ஸ் என்ற பழங்குடியின சாதிசான்று வழங்க வேண்டும்.



தங்கள் குலத்தொழிலான ஆடு வளர்த்தல் தொழில் மேம்பட தமிழ்நாடு அரசு ஆடு வளர்ப்பு நல வாரியம் அமைத்து, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை தங்கள் சமுதாய மக்களுக்கே கொடுக்க வேண்டும்.

இயற்கை, மற்றும் விபத்து போன்ற காரணங்களால் ஆடுகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதால், தேவையான காப்பீடு மற்றும் ஆடு வளர்க்கும் தொழிலை காப்பாற்ற தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தர வேண்டும்.

அரசியல் அங்கீகாரம் பெற எங்கள் இனத்திற்குரிய பிரதிநிதித்துவம் பெற இட ஒதுக்கீட்டில் தங்கள் குரும்ப இனத்திற்கும் உள் ஒதுக்கீடு வழங்கி அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு இச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...