கோவையில் அடுத்தடுத்து 8 கடைகளில் கொள்ளை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

கோவை எட்டிமடை கடைத்தெருவில் உள்ள அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து பணம், மற்றும் சிசிடிவி ஹார்டுடிஸ்க்குகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை க.க.சாவடி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எட்டிமடை பகுதியில் உள்ள கடைத்தெருவில் அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பணம் மற்றும் 3 கடைகளில் இருந்த சிசிடிவி பதிவு ஹார்டிஸ்க்குகளை திருடிச் சென்றுள்ளனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், எட்டிமடை பகுதியில் உள்ள எதிர் எதிரே அமைந்துள்ள 2 வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேக்கரி, போட்டோ ஸ்டுடியோ, செல்போன் கடை, ஹார்வேர்ஸ், சலூன், மளிகை கடை, பேன்ஸி கடை என அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.45 ஆயிரம் பணம் மற்றும் சிசிடி ஹார்டுடிஸ்க்குகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கடைகளில் பதிவான கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மேலும், இந்த திருட்டு சம்பவங்கள் அதிகாலை சுமார் காலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டிமடை பகுதியில் அடுத்தடுத்து 8 கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...