கோவை அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

விளாங்குறிச்சி அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் ஐடி ஊழியர்களை இறக்கி விட்டு சென்ற இன்னோவா கார், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



கோவை: கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அருகே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கோவை அடுத்த விளாங்குறிச்சி சாலை பால்காரர் தோட்டம் பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் இன்னோவா கார் ஒன்று ஐ.டி. நிறுவன ஊழியர்களை இறக்கி விட்டு திரும்பியுள்ளது.

அப்போது அந்த வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது.



அப்போது திடிரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் மின் கம்பம் முறிந்து மின் கம்பிகள் துண்டானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். விபத்து நடந்தவுடன் மின் விநியோகம் உடனடியாக தடைபட்டதாலும், அதிகாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.



இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், புதிய மின் கம்பிகளை மாற்றி, மின் கம்பத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...