காங்கேயம் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் மீது மதுப்பிரியர்கள் தாக்குதல் - போலி மது விற்பனை என புகார்!

காங்கேயம் அடுத்த சிவன்மலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் 2019 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்வது குறித்து கேட்க சென்ற மதுப்பிரியர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மதுப்பிரியர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே டாஸ்மாக் ஊழியர்களை மதுப்பிரியர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளக்கோவில் அடுத்துள்ள வீரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால்(43). இவர் காங்கேயம் அடுத்த சிவன்மலை - கல்லேரி இடையேயான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 2 ஆண்டுகளாக சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்.



இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் டாஸ்மாக் கடைக்கு வந்த 4 நபர்கள், மது பாட்டில்கள் வாங்கிச் செல்லும் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு நந்தகோபாலிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த 4 பேரும் நந்தகோபால் மற்றும் கடையில் வேலை செய்யும் ஊழியர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நந்தகோபால் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

*தாக்குதலுக்கான காரணம் என்ன?*



இந்த மதுபான கடையில் வாங்கப்பட்ட மதுபாட்டிலில் 2019 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாகவும், அந்த மதுபானத்தை குடித்த நபர் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மதுபான கடைக்கு சென்று மது அருந்தியவர்கள் கேட்டபோது மதுபான கடை ஊழியர்களுக்கும் மது பிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர்கள் சிலர் உள்ளே இருந்த பீர் பாட்டிலை அவர்களே எடுத்து உடைத்து விட்டு மது அருந்தியவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காயம் பட்ட மதுப்பிரியர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுபான கடையில் தாக்குதல் நடத்தியதாக நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மது அருந்த சென்றவர்கள் கூறியதாவது, 2019 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மது 3 வருடங்கள் கழித்து எப்படி விற்பனைக்கு வரும் என நாங்கள் கேட்டோம். ஆனால் அதுகுறித்து பதில் சொல்லாமல் தங்களை ஏளனமாக தகாத வார்த்தையால் பேசினர். அப்போது அவர்களே சில பாட்டிலைஎடுத்து உடைத்து விட்டு தங்கள் மீது பழி போட்டனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா காலகட்டத்தில் மது கிடைக்காமல் மது பிரியர்கள் தவித்து வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மதுபானம் எப்படி விற்பனைக்கு வந்தது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

மதுபாட்டில்களில் 2019 என போடப்பட்டு இருப்பதால், காலியான மதுபாட்டிலில் போலி சரக்குகள் விற்பனையாகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...