ஹோலி முடிந்து திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள் - காவல்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு!

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்தில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.



திருப்பூர்: ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூருக்கு திரும்பிவரும் வடமாநில தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பொய்யான சில வீடியோக்கள் காரணமாக வட மாநில தொழிலாளர்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும் ஹோலி பண்டிகை என்பதால் மீதம் இருந்த வடமாநில தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகைக்காக சென்றிருந்தனர்.



இந்நிலையில், பண்டிகை முடிந்து தற்போது வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூருக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை சார்பாக வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



வடமாநில தொழிலாளர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்திய போலீசார், அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட வசதிகள் குறித்தும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...