ஆசிட் வீச்சு விவகாரம்: ஆசிட்டை விற்பனை செய்தது யார் என விசாரிக்க வேண்டும் - மாதர் சங்கம் வலியுறுத்தல்!

கோவை நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் சுகந்தி, வீசப்பட்ட ஆசிட்டை விற்பனை செய்தது யார் என்பதையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


கோவை: கோவையில் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது வீசப்பட்ட ஆசிட்டை விற்பனை செய்தது யார் என விசாரிக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் சுகந்தி தெரிவித்துள்ளார்.



கோவை நீதிமன்ற வளாகத்தில் கவிதா என்ற பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவரே இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவிதாவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுகந்தி இன்று மாலை சங்க நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் சுகந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது,

நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் இதற்கு முன்பு காதலிக்க மறுத்ததால், காதலித்து விட்டு கைவிட்டால் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இன்று மனைவியின் மீதே கணவர் ஆசிட் வீசிய கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து பேசினோம். தமிழகத்தில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது.

ஆனால் நீதிமன்றத்திற்கு உள்ளேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அதிர்ச்சியுடன் பார்க்கிறோம்.

நீதிமன்றத்திற்கு விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு வரும் பெண்கள் அதிகம். பெண்கள் நீதிமன்றம் போகும் போது பாதுகாப்பற்ற நிகழ்வு நடந்தால் பெண்கள் எங்கு சென்று தங்கள் பிரச்சினைகளை வைக்க முடியும்?.

இந்தியாவில் குடும்ப வன்முறை நடப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இது போன்ற வன்முறைகளை குறைக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்கள் பாதுகாப்பான வளாகங்களாக இருக்க வேண்டும்.

அமிலங்கள் எங்கு விற்கப்படுகிறது? இவர் யாரிடம் அமிலம் வாங்கினார்கள்? என்பதும் பார்க்கப்பட வேண்டும். அமிலத்தை விநியோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...