கோவை விமான நிலையத்தில் ஆபத்துக் கால தடுப்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி!

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் முன்னிலையில், ஆபத்து கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை: கோவை விமான நிலையத்தில் ஆட்சியர் முன்னிலையில் ஆபத்து கால முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் ஆபத்து கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் (கடத்தல் எதிர்ப்பு மாக்) மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆபத்து (ஹைஜாக்கிங்) ஏற்படும் பொழுது எவ்வாறு செயல்படுவது, மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தல், தீவிரவாத நிகழ்வுகள் ஏற்படும் போது அதனை எவ்வாறு எதிர்கொண்டு பொது மக்களையும் பயணிகளையும் பாதுகாப்பது, மறைந்திருந்து குற்றவாளிகளை தாக்குவது, ஆபத்துக் காலங்களில் எவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொள்வது, மோப்ப நாய்களை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.



இதில் CISF காவலர்கள் 135 பேர், AAIயை சேர்ந்த 15 பேர், BCAS யை சேர்ந்த 1 நபர், ATC யை சேர்ந்த 7 பேர், FIRE/AAI யை சேர்ந்த 4 பேர், BDDS போலிஸ் 10 பேர், மாநில காவல்துறையினர் 6 பேர் உட்பட 213 பேர் பங்கேற்றனர்.



இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும் விமான நிலையத்தில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், விமான போக்குவரத்து பாதுகாப்பு துணை இயக்குனர் சச்சின் தேவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...