வால்பாறையில் ஆதிவாசி கிராமங்களுக்கு தார்ச்சாலை - பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்!

மக்களின் கோரிக்கையை ஏற்று, வால்பாறை நெடுங்குன்றம் செட்டில்மெண்டுக்கு 3 கோடியே 40 லட்சம் செலவில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைப்பதற்கான பணி பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளது.


கோவை: வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளன. இவற்றில் ஓரிரு கிராமங்கள் சாலை அமைக்க ஏற்ற இடமாக உள்ளது.

வால்பாறை அருகே வில்லோனி எஸ்டேட் வனப்பகுதிக்குள் நெடுகுன்றம் செட்டில்மெண்டு உள்ளது. அங்கு சுமார் 60 குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் வால்பாறைக்கு வருவதற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து வர வேண்டும்.



வனப்பகுதியில் ஏற்கனவே மண் சாலை இருந்த நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, நெடுங்குன்றம் செட்டில்மெண்டுக்கு 3 கோடியே 40 லட்சம் செலவில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது.



இதற்காக நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் எஸ். அழகு சுந்தரவள்ளி மற்றும் 5வது வார்டு உறுப்பினர் M.கவிதா மற்றும் நகரமன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் சத்தியவாணிமுத்து, அன்பரசன், பாஸ்கர், மணிகண்டன் மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வம் மற்றும் நெடுங்குன்றம் முப்பர் ரத்தினசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...