பொள்ளாச்சி ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பரிவார குடைகள் - திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை அன்பளிப்பு

பொள்ளாச்சி திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், 42 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்ட பரிவாரக் குடைகள், விசாலாட்சி- ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமிகள் திருவீதி உலா வருகையின் போது, ஐதீக முறையில் பயன்படுத்தப்படும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.



கோவை: பொள்ளாச்சி ஜோதி நகரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேதர் ஜோதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.



இக்கோவிலுக்கு பொள்ளாச்சி திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், விசாலாட்சி- ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமிகள் திருவீதி உலா வருகையின் பொழுது பயன்படுத்தப்படும் பரிவாரக் குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ஆனைமலை ஆர்ஷ வித்யாபீடம் யூஜ்ய ஸ்ரீ ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை, சுவாமி விவேகாந்தா கலை நற்பணி மன்ற நிர்வாகிகள், மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரூ 42 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பரிவார குடைகளை கோயில் அர்ச்சர்கள்களிடம் வழங்கினர்.

பிரதோஷம், மற்றும் திருவிழா காலங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் திருவீதி உலா வரும்போது இந்த பரிவாரக் குடைகள் ஐதீக முறையில் பயன்படுத்தப்படும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...