கோவையில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

கோவை மாவட்டம் வேட்டைக்காரன் குட்டையை சேர்ந்தவர் மஞ்சு (30). இவர், கருமத்தம்பட்டி நால் ரோட்டில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் சென்ற போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை 3 பெண்கள் பறித்துச் சென்றனர்.



கோவை: கோவையில் அரசு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற மூன்று பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வேட்டைக்காரன் குட்டையை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மனைவி மஞ்சு (30). இவர் அந்த பகுதியில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று கருமத்தம்பட்டி நால் ரோட்டில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்தார். அப்போது அந்த பேருந்தில் முககவசம் அணிந்தபடி நின்றிருந்த 3 பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மஞ்சு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அவர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற 3 பெண்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...