பல்லடம் அருகே இடி மின்னல் தாக்கி பசுமாடு பரிதாபமாக பலி

பல்லடம் அருகேயுள்ள சின்னூர் கிராமத்தில் அரசன் தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக தோட்டத்தில் கட்டியிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது.


திருப்பூர்: பல்லடம் அருகே இடி மின்னல் தாக்கி மேய்ச்சலுக்குக் கட்டப்பட்டிருந்த பசுமாடு பரிதாபமாக பலியானது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூர் கிராமத்தில் அரசன் தோட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர், விவசாயம் மற்றும் மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று காலை தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக தனது தோட்டத்தில் கட்டியுள்ளார்.



மாலை திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கிய நிலையில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த பசு மாட்டின் மீது இடி மின்னல் தாக்கி பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.



ஆசையாக வளர்த்த மாடு மின்னல் தாக்கி உயிரிழந்த ஆறுமுகத்தின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்த பசுமாடு அவரது தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...