கோவையில் கூலிப்படையை ஏவி இளைஞரைக் கொன்ற நண்பன் - அடமானம் வைத்த காரை திருப்பாததால் வெறிச்செயல்

கோவையில் காரை அடமானம் வைத்து பணம் வாங்கி திருப்பி தராத ஆத்திரத்தில், சோமையம்பாளையத்தை சேர்ந்த அஷ்வின், கூவிப்படையை மூலம் நண்பர் சிரஞ்சீவியை தாக்கியுள்ளார். சிகிச்சை பலனின்றி சிரஞ்சீவி, உயிரிழந்த நிலையில், அஷ்வின் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது23).



இவர் தனது நண்பரான அஷ்வின் என்பவரிடம் காரை அடமானம் வைத்து பணம் வாங்கி இருந்தார். ஆனால், சிரஞ்சீவி பணத்தை திருப்பி கொடுத்து காரை திருப்பாமல் இருந்ததாக தெரிகிறது.

இது குறித்து அஷ்வின் பலமுறை கேட்டும் சிரஞ்சீவி பணத்தை திருப்பி செலுத்ததாமல் இருந்த நிலையில், அஷ்வின் நெல்லையில் இருந்து கூலிப்படையை வரவழைத்துள்ளார்.

சஞ்சீவி நேற்றுமுன் மருதமலை சாலையில் சென்றபோது கூலிப்படையினர் சிரஞ்சீவி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த சிரஞ்சீவி சுயநினைவில்லாத நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவம் குறித்து சிரஞ்சீவியின் தந்தை பாலமுருகன் வடவள்ளி காவல் துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் கொலை முயற்சி பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் சிரஞ்சீவியின் நண்பர் அஷ்வின் கூலிபடையை ஏவி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, அஷ்வின் மற்றும் நெல்லையை சேர்ந்த கண்ணன், முத்தையா, ஆனந்த்பாபு ஆகிய 4 பேரை கைது செய்து வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...