இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு பெண்கள் பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு!

இந்திய தொழில்கள் கூட்டமைப்பில் (சிஐஐ) பெண்களுக்கான பிரத்யேக பிரிவின் புதிய தலைவராக ராஜலட்சுமி, துணை தலைவராக கிருத்திகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் 2023-24 ஓராண்டு இந்த பொறுப்பில் இருப்பார்கள் என சிஐஐ தலைமை தகவல்.


கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) தமிழ்நாடு, பெண்கள் பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக சிஐஐ அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தேசிய தொழில் அமைப்பான இந்திய தொழில்கள் கூட்டமைப்பில் (சிஐஐ) பெண்களுக்கென பிரத்யேக பிரிவு செயல்படுகிறது. தமிழ்நாடு பிரிவின் புதிய தலைவராக ராஜலட்சுமி, துணை தலைவராக கிருத்திகா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பெண் தொழில் முனைவோர் மேம்பாடு, குழந்தைகள் நலன், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் 2023-24 ஓராண்டு புதிய பொறுப்பில் பணியாற்ற உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...