இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வு!

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக ‘வோல்வோ’ இந்தியா குழும நிர்வாக இயக்குநர் கமல் பாலி, துணைத் தலைவராக கோவை சந்திரா டெக்ஸ்டைல்ஸ், நிர்வாக இயக்குநர் நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ‘சிஐஐ’ அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், தலைவராக ‘வோல்வோ’ குழுமம் இந்தியா நிர்வாக இயக்குநர் கமல் பாலியும், துணைத் தலைவராக கோவை சந்திரா டெக்ஸ்டைல்ஸ், நிர்வாக இயக்குநர் நந்தினியும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிஐஐ தமிழ்நாடு தலைவர், சிஐஐ இந்தியாவின் பெண்கள் பிரிவு தலைவர், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின்(என்ஐடி) ஆளுநர்கள் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்த நந்தினி, தற்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (டிட்கோ) தனி இயக்குநராக உள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...