கோவை 22வது வார்டில் தார் சாலை புதுப்பித்தல் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

கோவை மாநகராட்சியின் 22வது வார்டுக்கு உட்பட்ட குமுதம் நகரில் TURIF - 2022-23 திட்டத்தின் கீழ் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகளில் தார்சாலை புதுப்பித்தல் பணிகளை மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 22வது வார்டில் தார்ச்சாலை புதுப்பித்தல் பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 22 ஆவது வார்டு குமுதம் நகரில் உள்ள பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகளுக்கு TURIF - 2022-23 திட்டத்தின் கீழ், தார் சாலை புதுப்பித்தல் பணிகள் துவக்க விழா நேற்றைய தினம் (25.03.2023) நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவில், கவுண்டம்பாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் அசோக் பாபு, 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு,

6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, 5 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி, 22 வது வார்டு வட்டச் செயலாளர் பிரபாகரன், 8 வது வார்டு வட்டச் செயலாளர் வினோத் குமார், மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், 22 வது வார்டு அவைத் தலைவர் ஆனந்த குமார், துணை ஆணையாளர் முத்துராமலிங்கம், சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜெரால்டு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...