உடுமலை-கொழுமம் சாலை ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல் : மேம்பாலம் அமைக்க கோரிக்கை

உடுமலை அடுத்த கொழுமம் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த சாலையில், நேரத்திற்கு பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதால், மேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை பகுதியில் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கொழுமம், குமரலிங்கம் வழியாக பழனி செல்லும் வழித்தடம் முக்கிய சாலையாக உள்ளது.

குமரலிங்கம் பகுதியில் உள்ள 1000 ஆண்டுகள் கடந்த காசி விஸ்வநாதர் கோவில், பழமை வாய்ந்த தாண்டேஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் அமராவதி அணைப்பகுதிக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த வழித்தடத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

இதுதவிர ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளை பொருட்களை விற்பனை செய்வதற்காக நகரத்துக்கு கொண்டு வரவும் இந்த சாலை பயன்பட்டு வருகிறது. மேலும் பல குடியிருப்புகளுக்கு செல்லும் வழித் யில் உள்ளது. தடமாகவும் இது உள்ளது. இதனால் தினசரி ஏராளமான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.



ரயில் போக்குவரத்துக்காக இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும் சமயங்களில் ஏராளமான வாகனங்கள் சாலையில் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவசர வேலைகளுக்காக செல்பவர்கள் ரயில்வே கேட் திறக்கும் வரை தவிப்புடன் காத்திருக்கும் நிலை உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர முடியாத நிலை ஏற்படுகிறது.



இருசக்கர மற்றும் ஆட்டோ உள்ளிட்ட சிறியரக வாகனங்கள் செல்லும் வகையில் இந்த பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. ஆனால் நீண்ட நாட்களாக அந்த பாதை பராமரிக்கப்படாததால் சேறும், சகதியுமாகவும் புதர் மண்டியும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.



இதனால் ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நிற்கும் நிலை உள்ளது. இனிவரும் காலங்களில் உடுமலை வழியாக செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் போது இந்த சாலை வழியிலான போக்குவரத்து மிகவும் கடினமானதாக மாறி விடும்.எனவே கொழுமம் சாலை ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல் கட்டமாக இந்த பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...