உடுமலை சுற்றுவட்டாரத்தில் கன மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் காலை முதல் விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பருவமழை மாற்றம், சீதேஷ்ண நிலை காரணமாக மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.



இந்நிலையில் இன்று காலை முதல் உடுமலை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து வந்தது. தற்போது இடைவிடாமல் கன மழை பெய்து வருவதால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது,



வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே ஓரமாக நிறுத்தி மழையில் நனையாதபடி வணிக வளாகங்களில் தஞ்சமடைந்தனர். இடைவிடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...