தாராபுரம் அருகே முதல்வர் பிறந்தநாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம் - 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

தாராபுரம் அருகேயுள்ள பொன்னாபுரம் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் காங்கேயம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்குபெற்றது.



திருப்பூர்: தாராபுரம் அருகே முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தாராபுரம் ஒன்றிய திமுக சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.



இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் காங்கேயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கு பெற்றது.



இந்த மாட்டு வண்டி பந்தயம் 200 மீட்டர், 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு முதல் பரிசு ஒரு பவுன் தங்க நாணயமும், இரண்டாவது பரிசாக அரை பவுன் தங்க நாணயமும், மூன்றாவது பரிசாக கால் பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...