உடுமலை அருகே பாஜக சார்பில் மருத்துவ காப்பீட்டு முகாம் - 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதிவு!

உடுமலை அடுத்த பூலாங்கிணறு அருகேயுள்ள கென்னடி நகர் பகுதியில் பாஜக விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் இலவச ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு முகாமில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்யப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு பகுதியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் மத்திய அரசின் இலவச ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. கென்னடி நகர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, விவசாய அணி சமூக ஊடகப் பிரிவு தலைவர் மோகன் பிரசாத் தலைமை தாங்கினார்.



இந்த மருத்துவ காப்பீட்டு முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு அயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்யப்பட்டது.



இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராகவன், விவசாய அணி மாநில செயலாளர் மௌனகுருசாமி, கிளை பொறுப்பாளர் சேகரன், ரங்கநாதன், லோகேஸ்வரன், உடுமலை மேற்கு ஒன்றிய ஆன்மீக பிரிவு தலைவர் திருமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஷ்,

தொழில் பிரிவு நகர தலைவர் உடுமலை ராமராஜ், சின்ராஜ் கதிரவன் லோகேஷ் சித்தார்த் வேலுச்சாமி ராஜேஷ்குமார் சிவலிங்கம் மற்றும் பூலாங்கிணறு பாஜகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...