தாராபுரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்கும் அதிகாரி - ஆடியோ வெளியாகி பரபரப்பு!

அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கித் தருமாறு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வற்புறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. 40 கிலோ நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்கச் சொல்லி தொழிலாளர்களை அதிகாரி வற்புறுத்திய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம், சுமை தூக்கும் தொழிலாளர்களை லஞ்சம் வாங்கித் தர வலியுறுத்தும் அதிகாரி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.



தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தாராபுரம், அலங்கியம், தளவாய்பட்டினம், கொளத்துப்பாளையம், சத்திரம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட சுமார் ஏழு இடங்களில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அலங்கியம் அரசு கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களாக அரசு அதிகாரிகள் மற்றும் சுமைதொக்கும் தொழிலாளர்கள் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், விவசாயிகளிடம் யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு, கடந்த 10 நாட்களாக அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்களிடம், நெல் மணிகளை பிடிக்க வேண்டாம் என அரசு அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் 40 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர மறுத்தால் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் அரசு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் இருவரும் அலங்கியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதிகாரிகள் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு பத்து ரூபாய் கேட்கும் ஆடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



அதிகாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால், கடந்த இரண்டு மூன்று நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல், குவியல் குவியலாக தேங்கி கிடப்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...