கோவை மாவூத்தம்பதி அருகே தென்னங்கன்றுகளை சேதப்படுத்திய ஒற்றை காட்டுயானை - விவசாயி வேதனை!

கோவை மாவூத்தம்பதி அருகேயுள்ள முருகன்பதி கிராமத்தில் விவசாயி சதீஸ்குமார் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, அங்கிருந்த 11 தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்து சேதப்படுத்திய நிலையில், வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: மாவூத்தம்பதி அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மாவூத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட முருகன்பதி கிராமத்தில் சதீஸ்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலத்தில் அடிக்கடி வன விலங்குகள் வருவது வழக்கம். இதைத் தடுக்கும் வகையில், அவர் பேட்டரி பென்சிங் வேலியும் அமைத்துள்ளார்.



கடந்த சில மாதங்களுக்கு முன் சதீஸ்குமார் தோட்டத்திற்கு வந்த ஒற்றை காட்டு யானை மரத்தை முறித்து பென்சிங் கம்பிமீது போட்டு உள்ளே புகுந்து தென்னங்கன்றுகளை சேதப்படுத்திச் சென்றது. இந்நிலையில், நேற்று நள்ளிரவும் சதீஸ்குமார் தோட்டத்திற்கு வந்த ஒற்றை காட்டு யானை, பழைய பாணியிலேயே மரத்தை முறித்து பென்சிங் வேலி மீது போட்டுள்ளது.



மேலும், விவசாய தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த 11 தென்னங் கன்றுகளை பிடுங்கி எறிந்துள்ளது. இதைப் பார்த்த விவசாயி நீண்ட நேரம் சத்தமிட்டு, அந்தக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்.

இந்நிலையில், 3 ஆண்டுகளாக பாதுகாத்து வளர்த்து வந்த தென்னங்கன்றுகளை காட்டுயானை சேதப்படுத்திய நிலையில், வனத்துறை சார்பில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயி சதீஸ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...