தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம் - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில், காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


திருப்பூர்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரம் தாலுகா அலுவலக நுழைவாயில் முன்பாக இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக கடந்த 20 ஆண்டுகள் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். சரண்டர் விடுப்பு ஊதியம், ஊதியமற்ற நிலுவை உள்ளிட்ட ஜீவ காருண்யா கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், நூலகர் உள்ளிட்ட பணிகளுக்கு சிறப்பு காலம் வரை மற்றும் தொகுப்பு ஊதியம் மதிப்பூதியம் பெற்று வரும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...