பல்லடத்தில் ரூ.50 கோடியை மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்!

பல்லடம் அடுத்த வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மில்லில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி சுமார் 15 மேற்பட்டோரிடம் ரூ.50கோடி மதிப்பிலான நிலங்களை பெற்று மோசடி செய்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் சிவக்குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகே ரூ.50 கோடி மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேலப்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார். இவர் நூல் மில்லில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, ரத்தினசாமி, குமரேசன், பிரியா, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரின் ரூ.50 கோடி மதிப்பிலான நிலங்களை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த மோசடி வழக்கில் சிவகுமாருக்கு துணையாக இருந்த விஜயகுமார், ராகுல் பாலாஜி, பிரவீனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்களுக்கு சேர வேண்டிய பணத்தையும் பெற்று தர வேண்டும் என்றும், பல்லடம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், சிவக்குமார் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், இன்று வரை சிவக்குமாரை கைது செய்யாமல் காவல்துறையினர் மெத்தனம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடுமலை சாலையில் உள்ள சிவக்குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



20க்கும் மேற்பட்டோர் போலீசாரின் துணையோடு விஜயகுமார் என்பவரின் வீட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



அப்போது, தங்களது சொத்துக்களை இழந்து கடந்த மூன்று வருடங்களாக அலைந்து வருவதாகவும், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எங்களது சொத்துக்களை மீட்டுத் தருமாறு காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

சிவக்குமாரின் கூட்டாளிகளை நம்பி ஏமாந்ததால் தற்போது வீடு ஏலத்திற்கு வந்து ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும், தங்களது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...