தாராபுரத்தில் வர்த்தகர் சங்க பொதுக்குழு கூட்டம் - புதிய நிர்வாகிகள் தேர்வு!

தாராபுரம் வர்த்தகர் சங்கத்தின் 29வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழாவில் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டு தலைவராக சுலைமான், செயலாளராக செல்லமுத்து பொருளாளராக ரகுமான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் வர்த்தகர் சங்கத்தின் 29வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வர்த்தகர் சங்கத்தின் இருபத்து ஒன்பதாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா தாராபுரம் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்க முன்னாள் தலைவர் மறைந்த அகமது இப்ராகிம் பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில் தலைவராக சுலைமான், செயலாளராக செல்லமுத்து பொருளாளராக ரகுமான், உதவி தலைவராக சுப்பிரமணியன், உதவி செயலாளராக முகமது இக்பால், கௌரவ தலைவர்களாக சங்கரலிங்கம், ராஜேந்திரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...