ஊட்டி மலர் கண்காட்சி மே.19-ம் தேதி தொடக்கம்! - நீலகிரி ஆட்சியர் அம்ரித் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் நடப்பாண்டிற்கான கோடை விழா வரும் மே மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி மே.19-ந்தேதி தொடங்கவுள்ளதாக ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.


உதகையில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் தலைமையில் கோடை விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



அதில், மே 6-ந் தேதி முதல் கோடை விழா தொடங்கவும், முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சியை மே.6 மற்றும் 7-ந்தேதி என 2 நாட்கள் நடத்த முடிவு செய்யபட்டது.

அதனை தொடர்ந்து, மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி நடத்தவும், அதேபோல், மே 13, 14 மற்றும் 15-ந் தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.



குறிப்பாக மே 19, 20, 21, 22, 23 ஆகிய 5 தேதிகளில் பிரத்திபெற்ற 125-வது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நடைப்பெறுகிறது.

மே 27, 28 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக்கண்காட்சியை நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவ சுப்ரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...