கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்..! - சிபிஐ கட்சியினர் வலியுறுத்தல்

மடத்துக்குளம் அடுத்த கணியூர் பகுதியில் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மாணவர் விடுதி மற்றும் காவல்நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது, ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, உரிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



மடத்துக்குளம் அருகேயுள்ள கணியூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கவன ஈர்ப்பு தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். கிளை செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில், தாலுகா செயலாளர் கு சவுந்திரராஜன், மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் ரணதேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

பிரசாரத்தில் கணியூர் - காரத்தொழுவு சாலையில் மாணவர் விடுதி மற்றும் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும். 24 மணி நேரமும் செயல்படுவதாக கூறப்படும் கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

போதிய இட வசதி உள்ள நிலையில் மருத்துவமனையை தரம் உயர்த்தவும், உரிய மருத்துவர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் பேருந்து போக்குவரத்து உரிய அளவில் இல்லாத நிலையில் மகளிருக்கு இலவச பயண திட்டம் பயனில்லாமல் போகிறது.

எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணியூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும். மாலை நேரங்களில் பொது இடங்கள், கோவில் பகுதிகளில் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...