சிறுமுகை அருகே செல்போன் டவரில் திடீர் தீ விபத்து - பரபரப்பு!

சிறுமுகை அருகே மூலத்துறையில் உள்ள தனியார் செல்போன் டவரில் கரும்புகை வந்த நிலையில், ஜெனரேட்டர் பகுதியில் தீப்பற்றி எரிய துவங்கிய நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே செல்போன் டவரில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்த மூலத்துறையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இந்த செல்போன் டவரில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது.

இதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் செல்போன் டவரில் பற்றிய தீயானது மளமளவென முழுவதுமாக பரவியது.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள் தீ மளமளவென பரவி ஜெனரேட்டர் பகுதி முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.

இந்த விபத்தில் செல்போன் டவரில் இருந்த வயர்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

இதனால் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. செல்போன் டவர் தீ விபத்துக்கு காரணம் மின்கசிவா அல்லது யாரேனும் தீ வைத்தனரா என விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...