தாராபுரத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை - கூட்டுறவு மத்திய வங்கி அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை!

தாராபுரத்தில் கூட்டுறவு மத்திய வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து, தங்கம், வெள்ளி உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் உள்ள ஆறாவது வீதியில் செல்லமுத்து என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் குண்டடம் மத்திய கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா, நிலவள வங்கியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.



மேலும் இவர் நேற்று மத்திய கூட்டுறவு வங்கிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வரும்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஒன்பது பவுன் நகை, வைர கம்மல், ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகள், மேலும் மூன்று லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.



இதுகுறித்து செல்லமுத்து தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் தாராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...