கோவை ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் 50 மனுக்கள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவி இயக்குநர்(முன்னாள் படைவீரர் நலன்) மேஜர் ரூபாசுப்புலெட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பஷிர் அகமது, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சிறப்பு நிதியுதவி, குடிநீர் இணைப்பு, வீட்டுவரிச்சலுகை, இலவச காதுகேட்கும் கருவி, குடும்ப ஓய்வூதியம். உள்ளிட்ட 50 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.



தொடர்ந்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் 4 முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக ரூ.51,000 கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், ஒரு நபருக்கு ரூ.28,000 பக்கவாத சிறார் நிவாரண நிதியுதவி பெறுவதற்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.75000 மதிப்பிலான திருமண நிதியுதவி, தனது 3 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய ராஜலெட்சுமிக்கும். தனது 2 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய எம்பீட்டர் அமலோற்பவ நாதனுக்கும் தலா ரூ.25,000 வீதம், ரூ.50,000 போர்ப்பரணி ஊக்க மானியம் என மொத்தம் 10 நபர்களுக்கு ரூ.2.04 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...