கோவையில் மக்கள் நலத்திட்டங்களுக்காக தனியார் நிறுவனங்கள் ரூ.87.5 லட்சம் நிதியுதவி

கோவையில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில்‌ ரூ.12.50 லட்சம், சி.ஆர்‌.ஐ. பம்ப்ஸ்‌ நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் மற்றும் கோவை சருக்கு விளையாட்டு கழகம் சார்பில் ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.‌87.5 லட்சம் மதிப்பிலான நிதியுதவி மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் இன்று வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.87.5 லட்சம் நிதியுதவி மாநகராட்சி ஆணையரிடம் இன்று வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ ஆண்கள்‌ மேல்நிலை பள்ளியில்‌ நமக்கு நாமே திட்டத்தின்‌ கீழ்‌ புதிதாக கழிவறைகள்‌ கட்டுவதற்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ்‌ ரூ. 12.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையை நிர்வாக இயக்குனர்‌ கிருஷ்ணன்‌‌ கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌பிடம்‌ இன்று வழங்கினார். இந்த நிகழ்வின் போது, மாமன்ற உறுப்பினர்‌ கார்த்திக்‌ செல்வராஜ்‌ உடனிருந்தார்.



இதேபோல், கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில்‌ உள்ள எரியூட்டு மையத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ புதிதாக தகன மேடை மற்றும்‌ சடங்கு முன் மண்டபம்‌ கட்டும்‌ பணிகளுக்காக சி.ஆர்‌.ஐ. பம்ப்ஸ்‌ நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையை கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்பிடம் சி.ஆர்‌.ஐ. பம்ப்ஸ்‌ நிர்வாக துணைத்‌ தலைவர்‌ செளந்தரராஜன்‌ இன்று‌ வழங்கினார்‌. இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா உடனிருந்தார்.



மேலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ வ.உ.சி. மைதானத்தில்‌ உள்ள சருக்கு விளையாட்டு அரங்கத்தில்‌ புனரமைப்பு பணிகள்‌ மேற்கொள்வதற்காக கோவை சருக்கு விளையாட்டு கழகம் சார்பில் ரூ.25 லட்சம்‌ வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை கோவை சருக்கு விளையாட்டு கழக செயலாளர்‌ சந்திரசேகர் மற்றும் பொருளாளர்‌ சாந்த நரசிம்மன்‌ ஆகியோர், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌பிடம் இன்று வழங்கினர். இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா உடனிருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...