தாராபுரம் அரசு மருத்துவமனையில் திடீர் வெடி சத்தம் - பரபரப்பு!

தாராபுரம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் திடீரென டைல்ஸ் கற்கள் திடீரென வெடித்ததால், அதிர்ச்சியடைந்த நோயாளிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில், நேற்றிரவு அரசு மருத்துவமனையின் முன்பக்க அவசர சிகிச்சை பிரிவில் சிலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென தரையில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் ஒன்று, பலத்த சத்தத்துடன் வெடித்தது.



இதனால், அவசர சிகிச்சை பிரிவில் சுமார் 36 சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவ செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அச்சமடைந்து, அலறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.

திடீரென ஏற்பட்ட சத்தம் மற்றும் அதிர்வுக்குக் காரணம் பூகம்பமா? நிலநடுக்கமா? என தெரியாமல் அங்கிருந்த அனைவரும் அரசு மருத்துவமனைவளாகத்தை விட்டு வெளியே ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...