தாராபுரத்தில் சாலையை ஆக்கிரமித்து நின்ற வாகனங்களை அகற்றிய போலீசாருக்கு குவியும் பாராட்டு!

தாராபுரத்தில் அண்ணா சிலை முதல் பூக்கடை கார்னர் வரை சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக புகார் எழுந்ததால் அந்த வாகனங்களை அதிரடியாக அகற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட வாகனங்களை அதிரடியாக அகற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தாராபுரம் அருகேயுள்ள அண்ணா சிலை முதல் பூக்கடை கார்னர் வரை சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.



இந்த நிலையில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு மற்றும் ஆய்வாளர் மணிகண்டன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பரமசிவம் முன்னிலையில் காவல்துறையினர் தாராபுரம் மக்களின் வேண்டுகோளை ஏற்று அதிரடி நடவடிக்கையாக அவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



அதன்படி, அண்ணா சிலையில் இருந்து பூக்கடை கார்னர் வரை பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்த கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினர்.



பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள தாராபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...