உடுமலை அருகே கிடப்பில் போடப்பட்ட தரைமட்ட பாலம் கட்டும் பணி - வாகன ஓட்டிகள் அவதி!

உடுமலை அடுத்த கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் பணிகளால் தரைமட்ட பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாலும், அங்குள்ள பெரிய அளவிலான பள்ளத்தில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விழுந்து விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தரைமட்ட பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் அருகே கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் பணிகளால், அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. இதனால் பொள்ளாச்சி- பழனி சாலையில் இருந்து இணைப்பு சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் கழிவுநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தரைமட்ட பாலத்தை புதுப்பித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு பணி தொடர்ந்து நடைபெறாததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது, நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு செல்வதற்கு இந்த சாலை பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. இதில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்ததை யொட்டி புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன் பின்பு பணிகள் நடைபெறவில்லை.

இதன் காரணமாக ஆண்டாள் சீனிவாசன் லே அவுட், பெரியார் நகர், பழனியாண்டவர் நகர், ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு வேறு சாலை வழியாக சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து கால்வாய் ஓரத்தில் வசித்து வரும் பொதுமக்களுக்கு உடல் நலக்குறைபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.

பொள்ளாச்சி - பழனி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியவாறு பெரிய அளவில் குழி வெட்டப்பட்டு உள்ளதால் அந்தப் பகுதியை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எனவே கழுத்தறுத்தான் பள்ளம் அருகே கிடப்பில் போடப்பட்ட தரைமட்ட பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...