உலக அமைதி, வன்முறை எதிர்ப்பை வலியுறுத்தி ஜிட்டோ பெண்கள் அமைப்பினர் அஹிம்சா மாரத்தான்

உலக அமைதி, வன்முறை எதிர்ப்பை வலியுறுத்தி கோவையில் ஜிட்டோ பெண்கள் அமைப்பு சார்பில் 3 பிரிவுகளில் நடைபெற்ற அஹிம்சா மாரத்தான் போட்டியில் ராணுவம், காவல்துறை, ஆண்கள், பெண்கள் என ஜாதி, மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.


கோவை: உலக அமைதி, வன்முறை எதிர்ப்பை வலியுறுத்தி கோவையில் ஜிட்டோ பெண்கள் அமைப்பு சார்பில் அஹிம்சா மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.

உலகம் முழுவதும் 22 நாடுகளிலும், இந்தியாவில் 65க்கும் மேற்பட்ட நகரங்களிலும் கின்னஸ் உலக சாதனை நிகழ்வாக அஹிம்சா மராத்தான் நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகவும், அமைதியை வலியுறுத்தியும் அஹிம்சா மாரத்தான் நடைபெற்றது.



முழுவதும் பெண்கள் ஒருங்கிணைத்த இந்த மாரத்தானை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மூன்று, ஐந்து, பத்து கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், இந்திய தரைப்படை, கப்பல் படை, விமானப் படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த ராணுவத்தினர், காவல் துறையினர் உட்பட வயது வித்தியாசம், ஜாதி, மதம் ஆண் பெண் என்று எந்தவித வித்தியாசமும் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

கோவையில் நடைபெற்ற ஜிட்டோ அகிம்சா மாரத்தான் போட்டியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...