இடமாறுதலாகி செல்லும் வால்பாறை காவல் ஆய்வாளருக்கு பிரிவு உபச்சார விழா!

வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் இடமாறுதலாகி, வேறு இடத்திற்கு செல்லவுள்ள நிலையில், அவருக்கு காவல்நிலையத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த விழாவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கோவை: வால்பாறை காவல் நிலைய ஆய்வாளருக்கு அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் இணைந்து பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கற்பகம். இவர், சுமார் 1 வருடம் 8 மாதங்கள் வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.



இந்நிலையில், தற்போது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு இடம் மாறுதல் நிமித்தம் செல்வதால் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

வால்பாறை டி.எஸ்.பி கீர்த்தி வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரம். வார்டு உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



காவல் ஆய்வாளர் கற்பகம் வால்பாறை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக சிறு பள்ளி கூடத்தில் இருந்து கல்லூரி வரை பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் கஞ்சா தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.



மேலும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம் மனநிலை ஆலோசனையும் வழங்கி உள்ளார். இதனால் வால்பாறை பகுதியில் தற்கொலை போன்ற செயல்பாடுகளை தவிர்க்கும் வண்ணம் செயல்பட்டு வந்துள்ளார்.

மேலும் சுமார் 91 பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகள் என்று பல்வேறு வகையான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார், இதனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடைப்பட்ட கருத்து வேறுபாடுகளை தவிர்த்து குழந்தைகள் நன்கு படிக்கும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளார்.



தற்பொழுது இவர் இடமாற்றமாகி செல்வதால் வால்பாறை காவல் நிலைய அதிகாரிகளும் பொதுமக்களும் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டனர்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...