கோவையில் அரங்கேறிய தொடர் கொள்ளை சம்பவங்கள் - தூத்துக்குடியில் சிக்கிய குற்றவாளிகள்!

கோவை மாவட்டம் எட்டிமடையில் அடுத்தடுத்து 8 கடைகள் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜன் (32), பாலகிருஸ்ணன் (35), பாரதிசெல்வம் (வயது22) மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜா (37) என 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கடந்த மார்ச் 20 ஆம் தேதி கோவை எட்டிமடை பிரிவில் உள்ள மளிகை கடை, போட்டோ ஸ்டுடியோ, சலூன் கடை உள்ளிட்ட 8 கடைகளில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் சுமார் ரு.45 ஆயிரம் பணம் மற்றும் சிசிடிவி ஹார்டிஸ்க்குகளை திருடிச் சென்றனர்.

அன்றைய தினமே பிச்சனூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது60) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 12 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து வீடு மற்றும் 8 கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு நடந்த திருட்டுச் சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மார்ச் 21 ஆம் தேதி பூலுவப்பட்டி பகுதியில் உள்ள பால்பாண்டி என்பவருக்கு சொந்தமான உரக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அவரது கடையில் இருந்து அருகே உள்ள தங்க நகைக்கடைக்கு துளையிட்டு உள்ளே புகுந்து திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆலாந்துறை போலீஸார் ரோந்து சென்றதால் போலீஸாரை கண்ட மர்ம நபர்கள் சுத்தியம், கடப்பாறையை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதில் தூத்துக்குடி மாவட்டம் வள்ளநாடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரை போலீஸார் மடக்கி பிடித்தனர்.

அடுத்தடுத்த திருட்டுச்சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதில், தூக்குக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு குழு, இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, தூத்துக்குடிக்கு விரைந்த தனிப்படை போலீஸார், அங்கு பதுங்கியிருந்த ரங்கராஜன் (வயது32), பாலகிருஸ்ணன் (வயது35), பாரதிசெல்வம் (வயது22), கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜா (வயது37) ஆகிய நான்கு பேரை மடக்கி பிடித்தனர். அவர்களை கோவை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தூத்துக்குடி மாவட்டதை சேர்ந்த பலராமன் என்பவர் தலைமையில் செயல்பட்டு வந்த 5 பேரும் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாடிக்கையாக சென்று பூட்டுகளை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பலராமன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரையும் போலீஸார் அழைத்துவந்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...