உடுமலை அரசுப்பள்ளியில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் - பாழாகும் அவலம்!

உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகிய நிலையில், 6 மாதமாக சீரமைக்கப்படாமல் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைக்கப்படாமல் பாழாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் நவீன சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்கென சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 மூலம் ரூ.5 லட்சம் செலவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது.

இந்த இயந்திரம் நிறுவப்பட்டு ஒரு சில மாதங்கள் கூட செயல்படாத நிலையில் திடீரென பழுதடைந்தது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த இயந்திரமானது, செயல்படாத நிலையில் சுத்திகரிப்பு இயந்திரம் வீணாகி வருகிறது.

இதனால், மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...