உடுமலையில் புதிய தமிழகம் கட்சி பொதுக்கூட்டம் - டாக்டர். கிருஷ்ணசாமி பங்கேற்பு!

உடுமலையில் நடந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அவருக்கு பள்ளிகளில் பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.



புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியின் பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்று டாக்டர்.கிருஷ்ணசாமி பேசுகையில்,



ஒவ்வொருவர் வாழ்விலும் குருவாக, வழிகாட்டியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் இல்லை என்றால் யாரும் வாழ்வில் முன்னேற முடியாது. உடுமலையில் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னுடைய நீண்ட நாள் ஆசையான ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவாக இங்கு கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் மது ஒழிக்க வேண்டும் என பலமுறை ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. மதுவால் எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். ஆகையால் மதுவை ஒழிக்க அறப்போராட்டம் நடத்தவேண்டிய சூழ்நிலை உருவாகி வருகின்றது என்றார்.



இந்த, குடிமங்கலம் பூளவாடி, உட்பட அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகளை அவர் வழங்கினார்.



பொதுக்கூட்டத்தில் நிறைவில், மது ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.



மேலும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி-க்கு பாடம் சொல்லிக் கொடுத்த மூன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.



இந்த கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்துார் சட கோப ராமானுஜ ஜீயர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், பா.ஜ.பொதுசெயலாளர் முருகானந்தம், முன்னாள் எம் எல்.ஏ., தனியரசு, விஸ் கர்மாஜகத்குரு பாபுஜி சுவாமிகள் மற்றும் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தமிழ்மணி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...