தாராபுரத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள மாநில தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் திருப்பூர் மாவட்ட சங்கம் சார்பில் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதற்கு மாவட்ட தலைவர் இளங்கோ ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஷா, மாவட்ட பொருளாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பணி வரன்முறை மற்றும் பதவி உயர்வினை தாமதம் இன்றி வழங்க வேண்டும். விற்பனையாளருக்கு ஊதிய உயர்வு மற்றும் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்.



அண்டை மாநிலமான கேரளாவில் தொடக்க கடன் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குவதைபோல தமிழ்நாட்டிலும் இதனை தமிழ்நாடுஅரசு நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.



இதில், மாவட்டம், தாலுகா அளவிலான கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...