கோவை மாநகரில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


கோவை: கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதில் சில இடங்களில் மிதமான மழையும், பல இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.



குறிப்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி, ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக மாநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை துவங்கும் சில விநாடிகள் மட்டும் மிகச்சிறிய அளவிலான ஆலங்கட்டி மழை பெய்ததால், அப்பகுதி மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...