தாராபுரம் அருகே மாணவியிடன் செயின் பறிப்பு - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

தாராபுரம் அருகே தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த சிவகுமார் மகள் கீர்த்தனா, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தாராபுரத்திற்கு பேருந்தில் பயணித்த போது, முக கவசம் அணிந்த பெண்கள் செயினை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் நூதன முறையில் பெண்கள் செயினை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அருகேயுள்ள தளவாய்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் கீர்த்தனா. கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவ தினத்தன்று தளவாய் பட்டணத்திலிருந்து தாராபுரம் செல்ல தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்தார்.



பேருந்தில் பயணிகள் அதிகம் இருந்ததால், மாணவி கீர்த்தனாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை நோட்டமிட்ட முக கவசம் அணிந்திருந்த இரண்டு பெண்கள் நைசாக கூட்டத்தில் நெரிசலை பயன்படுத்தி கழுத்திலிருந்த தங்கச் செயினை பறித்துள்ளனர்.

இந்நிலையில் தாராபுரம் பேருந்து நிலையம் வந்து இறங்கிய மாணவி கீர்த்தனா தனது கழுத்திலிருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள இரண்டு சவரன் தங்கச் சங்கிலி காணவில்லை என்று பதறி அடித்து பேருந்து நடத்துநரிடம் சென்று தகவலை கூறினார்.



உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேருந்திலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது கருப்பு மற்றும் வெள்ளை நிற சால்களை அணிந்த இரண்டு பெண்களில் கருப்பு நிற முககவசம் அணிந்த பெண் மாணவி கீர்த்தனாவின் கழுத்திலிருந்த தங்கச் செயினை திருடுவது, பதிவாகி இருந்தது.

சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்துப் பெண்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...