பல்வேறு தலைப்புகளின் ஆய்வு முடிவுகளை கோவை ஆட்சியரிடம் சமர்பித்த மாணவர்கள்!

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் {District Collectors Internship:Programme) தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தலைப்பின்கீழ் ஆய்வுகளின் முடிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் சமர்பித்தனர்.


கோவை: பல்வேறு தலைப்புகளின் கீழ் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் முன்னிலையில் மாணவர்கள் சமர்பித்தனர்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணைமுதல்வர் நஞ்சன்பால், ரோட்டரி டெக்ஸ்சிட்டி தலைவர் விஜய் ராமாந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டம் என்பது கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், இளம் ஆர்வர்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில் தாங்களாகவே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் குறுகிய கால பயிற்சியானது அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 45 நாட்களும், நீண்டகால பயிற்சியானது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 6 மாதங்களும் வழங்கப்படும்.



மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் குறுகிய கால பயிற்சியில் 24 மாணவர்களும், நீண்டகால பயிற்சியில் 6 மாணவர்களும் தேர்வு பெற்றனர். குறுகிய கால பயிற்சியில் தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் காலை உணவுத்திட்டம், இ.சேவை மையம், திடக்கழிவு மேலாண்மை, ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட தலைப்புகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சமர்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...